துலாம் ராசி அன்பர்களே, இந்த வார பலன்படி, நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நிறைவேற்ற வேண்டிய பல பணிகள் உங்களை சுற்றி சுற்றி இருக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகமானாலும் கூட அவை அதிர்ஷ்டத்தைத் தருவதாகவே இருக்கும். பொருளாதாரத்தில் தன்னிறைவு ஏற்படும். புது வாகனம் வாங்கும் யோகம் உண்டு. எதிரிகளின் இன்னல்கள் குறைந்து ஏற்றமான நிலை உண்டாகும். உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்பு மாறும். எதிர்பார்த்த காரியம் நிறைவேற சிறிது தாமதம் ஆகும். நட்பு வட்டம் விரிவடையும். உங்கள் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com